Author: ஜெயகாந்தன்
•15:21
Share
அகம்பாவம் தான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை காரணம். அகம்பாவம் தான் மிகப் பெரிய அறியாமை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஒட்டாமல் செய்கிறது. புரிந்தவர் மீது பொறாமை வருகிறது. புரியாத போது ஆத்திரம் வருகிறது. மனிதனை, மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம். உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.

ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.

"உலகி்லேயே அதிசயமான விஷயம் எது?" என தர்மதேவன் கேட்க, பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் சொன்னார். "தினம் தினம் மரணத்தை பற்றி நேரே கேட்டும், சில சமயம் நெருக்கமாய் அனுபவித்தும் இந்த மனிதன் தான் மட்டும் நெடுநாள் உயிரோடு இருக்கப் போவதாய் எப்போதும் எண்ணும் நிலை அதிசயம்".

கோழைக்கும் , அடிமை மனசுகாரனுக்கும் ,பொய்யனுக்கும் ,புத்தி மாறாட்டம் உள்ளவனுக்கும் இந்த உலகில் எந்த சுகமும் இல்லை. -மனு நீதி.

எந்த சமூகம் ஒரு பெண்ணை கொடுமை படுத்துகிறதோ, கண்ணீர் விடச் செய்கிறதோ அந்த சமூகம் நிர்மூலமாகும்.

மண்மேல பாசம் வைச்சவன் , மண்ணை விட்டுப் போகக்கூடாது .போறவன் , பாசம் வைக்கப்படாது. மரண பயத்தை புறக்கனித்தவனுக்குத்தான் நாத்திகம் ஞானமார்க்கம். மரண பயத்தை ஏற்றுகொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரணபயத்தோடே வாழ்கிறான்.

மனைவியை நேசிக்கத் தெரியாதவன் வாழ்க்கையை நேசிக்க தெரியதவனகிறான். புருஷனை புரிந்து கொள்ளாதவள் எதையும் புரிந்து கொள்ளமுடியாதவள் ஆகிறாள்.

"தருமபுத்திரா, மனிதரில் வெற்றி பெற்றவர் யார்?" "எல்லா நேரத்திலும் நிதானமாக இருப்பவனே மனிதரில் வெற்றி பெற்றவன்".

நவீனம் என்ற வார்த்தையை நம்மில் பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். "எல்லா விதையும் மண்ணில்தான் முளைக்க வேண்டும். நீரும், வெளிச்சமும் மிக அவசியம். காற்றில் விதை முளைக்காது. இருட்டில் பூ மலராது நவீனம் என்பது இயற்கையிலிருந்து மாறுவது அல்ல." 

("இறைவனை அடைய ஏதாவது உபதேசிக்கக் கூடாதா?"-வாதவூரார் குரு(இறைவன்):"ஆதி குருவான தக்ஷிணாமூர்த்தி, எல்லா குருவிற்கும் குருவான தக்ஷிணாமூர்த்தி மௌனமே உபதேசமாகத் தருகையில், மற்றவர் உபதேசிப்பத்தையே ஒரு வழியாகக் கொண்டால்,அந்த மூடத் தனத்தை என்ன சொல்வது?" "மௌனம்தான் உபதேசம். ஏனெனில் இது சொல்லி புரிகின்ற விஷயமே அல்ல. இது உணர்வது ." "இது பரிமாறிக்கொள்ளும் விஷயமே அல்ல. இது தானாய் தனக்குள் தோன்றுவது" "உன்னுடைய இறைவனை நீதான் தேடிக்காண வேண்டும். வேறு எவரும் கைப்பிடித்து அழைத்துப் போக மாட்டார்." "அது முயற்சியில் கிடைப்பதல்ல. உன் எல்லா முயற்சியும் கைவிட்டுவிட உனக்குள் இறையருள் வந்து தங்கும்.")

"உலகத்துல எல்லா மனுஷாளுக்கும் உள்ள வேதனை இதான்... தன்னையும் நம்பறதில்லை... தனக்கு மேல இருக்கற சக்தியையும் நம்பறதில்லை.." கவலையற்ற மனிதருக்கு முகம் மிக அழகாக இருக்கும். பேராசை அற்றவருக்கு கவலை வராது.பேராசை இல்லாதிருக்க கிடைத்தது போதும் என்ற பொன்மனம் வேண்டும். -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்-2.

பொறாமையினுடைய வெளிப்பாடு என்ன? இன்னா சொல். பொறாமை வந்த உடனே வார்த்தைகள் துவேஷமுள்ளவயாய் மாறிவிடும்.கெட்ட வார்த்தைகள் நிறைந்து வெளிப்படும். எந்த பொறாமையும் இனிமையாய் வெளிப்பட்டதில்லை. -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்-2.

பொறாமைப்பட்ட மனம் புலம்பலாகத்தான் இருக்கும். தூக்கமற்றுத் தவிக்கும். புலம்பலும் தூக்கமற்ற நிலையும் வேலை செய்வதிலுள்ள மும்முரத்தை குறைக்கும். கையிலிருக்கிற வேலை அல்லது உங்கள் தொழில் இதில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய்விடும். பொறாமைப்படுதலே தொழிலாக மாறிவிடும். -பொறாமை அகற்றல்,வெற்றி வேண்டுமெனில்-2.

 பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 8
This entry was posted on 15:21 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: