Author: ஜெயகாந்தன்
•08:20
ஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்றகிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாலகுமாரன். பள்ளி இறுதி வகுப்புவரை தேறிய பாலகுமாரன், சுருக்கெழுத்தாளராக வாழ்கையைத் தொடங்கி, பிறகு பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பதவி வகித்தவர். எழுபதுகளின் துவக்கத்தில் வெகுஜனத் தன்மையோடு கவிதைகள் எழுதத் துவங்கிய இவர், வெகுஜன சிறுகதைகள் எழுதுவதில் மடைமாறி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். எண்பதுகளில் தமிழ் வெகுஜன நாவல் எழுத்தானது, ஒருதரமற்ற- தட்டையான- உள்ளீடற்ற குற்றக் கதைகளின் வணிக எழுத்தாக மலிலிந்துகிடந்த நேரத்தில், எல்லாருக்குமான எளிய உளவியல் பார்வை கொண்ட நூற்றுக்கும்மேற்பட்ட சமூக, குடும்பக் கதைகளை மிகுபுனைவு நாவல் களாக எழுதி,சுஜாதாவுக்கு இணையாக தமிழ் வெகுஜன வாசகர் பரப்பின் ரசனையை ஒருபடி மேம்படச் செய்தவர் பாலகுமாரன். இவரது எழுத்துக்கள் தமிழ் வெகுஜன வாசகனை நவீன வாசிப்புக்குக் கொண்டு வந்து சேர்த்த படிக்கட்டுகள் என்ற மதிப்பீடு தீவிரவாசகர்கள் மத்தியில் உண்டு.