Author: ஜெயகாந்தன்
•12:16
"இரும்பு குதிரைகள்" கவிதைகள்.
                                                                                                     

"சவுக்கடிபட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை கண்மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகம்தானென்று கதறிட மறுக்கும் குதிரை கல்லென்று நினைக்க வேண்டாம் கதறிட மேலும் நகைக்கும் உலகத்தை குதிரை அறியும்"
                                                                                                     
"நிலம் பரவி கால்கள் நீட்டி கன்னத்துப் பக்கம் அழுந்த குதிரைகள் தூங்குவதில்லை ஏனைய உயிர்கள் போல நிற்கையில் கண்கள் மூடி களைப்பினைப் போக்கும் குதிரை தொட்டதும் விழித்துக் கொள்ளும் தொடுதலைப் புரிந்து கொள்ளும் தூங்குதல் பெரிய பாவம் தூங்கவா பிறந்தீர் இங்கு? வாழ்வதோ சிறிது நாட்கள் அதில் சாவினை நிகர்த்த தூக்கம் புரிபவர் பெரியோர் அல்லர் வாழ்பவர் தூங்க மாட்டார். குதிரைகள் கண்கள் மூடி குறி விரித்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்சகட்டம் நெற்றிக்குள் சந்திரபிம்பம்"