Author: ஜெயகாந்தன்
•15:21
அகம்பாவம் தான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை காரணம். அகம்பாவம் தான் மிகப் பெரிய அறியாமை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஒட்டாமல் செய்கிறது. புரிந்தவர் மீது பொறாமை வருகிறது. புரியாத போது ஆத்திரம் வருகிறது. மனிதனை, மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம். உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.

ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.

Author: ஜெயகாந்தன்
•15:27
எதனால் மனிதருக்கு வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடிவதில்லை. வெற்றிக்கோ முன்னேற்றத்திற்கோ சந்தர்ப்பங்கள் எவருக்கும் ஏற்படாமல் இராது. அவை ஏற்படும்போது இது வெற்றிக்கான விஷயம் என்று தெரிவதே இல்லை.நல்ல வாய்ப்பு என்று ஒரு வேலையின் ஆரம்பம் காட்டுவதே இல்லை. -கடலோரக்குருவிகள்.

Author: ஜெயகாந்தன்
•11:39
எல்லா ஊர்களிலும் எல்லா மொழிகளிலும் வசவுகள் உடலுறவு சம்மந்தமாகவும், புணர்ச்சி சம்மந்தமாகவும் இருக்கின்றன. போகத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுபவையாகவே இருக்கின்றன. உடலுறவு மனித ஆங்காரத்தின் விஷயமாகப் போயிற்று. மன ஆங்காரத்தை வெளிப்படுத்த உடல் ஆங்காரத்தின் விஷயம் முக்கியமாயிற்று.

ஒருவனை கடன்காரன் என்றோ, கொலைகாரன் என்றோ திருடன் என்றோ பொய்யன் என்றோ சொல்லுவதால் ஏற்ப்படும் கோபத்தை விட, அவனை இயலாதவன் என்று சுட்டிக்காட்டுகிறபோது கோபம் ரௌத்திரமாக மாறுகிறது. புணர்ச்சி முக்கியமாக இருந்தது. அதே சமயத்தில் இழிவாகவும் கருதப்பட்டது. முக்கிய மனதை இழிவுபடுத்த மூர்க்கம் பிறந்தது. ஜனங்கள் புணர்ச்சி கலந்த வசவைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களைப் போனார்கள். -கனவுகள் விற்பவன் 2.

Author: ஜெயகாந்தன்
•18:09

வாழ்க்கை என்பது எளிதே அல்ல. அது நமது கற்பனைகளுக்கும். கணக்குகளுக்கும் அடங்காது. மிக நுண்ணிய சிக்கல்கள் கொண்டது. மேலோட்டமாய் நுனிப்புல் மேய்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாய் சரித்திரமில்லை. கற்பனையில் வாழ்ந்து தான் கற்ப்பனை செய்து கொண்டதே உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிற வாலிபர்களும். யுவதிகளும் அவஸ்தைப்படாமல் மீண்டதில்லை.
-மனசே மனசே கதவைத்திற.

Author: ஜெயகாந்தன்
•17:05
நம்புவதால் ஏற்படுகிற பயமின்மையும், பயமின்மையால் ஏற்படும் சந்தோஷமும், சந்தோஷத்தால் ஏற்படும் உறுதியும் மனிதனுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் கம்பிரத்தைக் கொடுத்துவிடுகின்றன. அப்பட்டமான தோல்வியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்க வைத்துவிடுகின்றன.
-திருபூந்துருத்தி.

தோல்வி என்பது பெரிய விஷயமே அல்ல.தோல்வி வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி, அது வந்துவிட்டபோது ஏற்படும் மனத்துவளலே முக்கியமான விஷயம்.

Author: ஜெயகாந்தன்
•15:57
மலர்ச்சியாக உலகத்தில் தெரிகின்ற பெண்ணுக்கு அடிவேர் ஆண்தான்.அந்த அடிவேர் உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் பசுமையான செடி மிக முக்கியம்.மலர்கள் மிகமுக்கியம். இதுதான் வாழ்க்கை.
-உத்தமன்

ஆத்திரப்படுபவன் திறமை இருந்தாலும் அசிங்கப்படுவான்.
-உத்தமன்.