Author: ஜெயகாந்தன்
•21:00
Share
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -வெற்றி வேண்டுமெனில்-2.

மனிதனின் நாகரீகம் மொழி. மொழியின் நாகரீகம் கவிதை. கவிதை வளம் மிக்க தமிழ் மொழியை புத்தகப்படிப்பு இல்லாததால் மெல்ல சிதைத்து வருகிறோம்.காலம் காலமாய் வளர்ந்து வந்த ஒரு நாகரீகத்தைக் கண்மூடித்தனமாய் சிதைத்து வருகிறோம். -வெற்றி வேண்டுமெனில் -2.



நல்ல புத்தகங்கள் மனதை விசாலமடையச் செய்கின்றன. வேறு ஒரு வாழ்க்கையை, வேறு ஒருவர் அனுபவத்தை, அவர் பல ஆண்டுகள் வாழ்ந்து கற்றுக் கொண்டதை, அவர் பல புத்தகங்கள் படித்து தெளிந்து தேர்ந்ததை, ஒரு புத்தகமாக, ஒரு வாக்கியமாக, ஒரு கவிதையாக நம்மிடையே பரிமாறிக் கொள்கிறபோது அவர் வயதும் அனுபவமும் நம்மிடையே வந்து நிற்கின்றன.. -வெற்றி வேண்டுமெனில்-2.

படிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு பேச்சுத் தெளிவு குறைவாகத்தான் இருக்கும். கூறியது கூறலும், கூச்சலாகப் பேசுதலும் அதிகமாக ஏற்படுகின்றன. -வெற்றி வேண்டுமெனில்-2.

புத்தகம் படிப்போர் மொழி அறிவு உடையவராகவும், அந்த மொழி அறிவால் சிந்தனைத் திறன் மிக்கவராகவும், சிந்தித்ததை வெளியே சொல்லத் தெரிந்த வலிவு உடையவராகவும் இருக்கிறார். இதனால் அவருக்குப் பேச்சு வலிமை மேம்படுத்துகிறது. -வெற்றி வேண்டுமெனில்-2.

எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி. -வெற்றி வேண்டுமெனில்-2.

கெட்டது இருப்பதால்தான் நல்லதின் சிறப்பு தெரிகிறது. கொடுமை இருப்பதால்தான் உதவிகள் உன்னதமாகப் புரிகின்றன. வெறுப்பு இருப்பதால்தான் அன்புக்கு அர்த்தம் இருக்கிறது. -வெற்றி வேண்டுமெனில் 2.

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 10
This entry was posted on 21:00 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: