Author: ஜெயகாந்தன்
•15:32
கிரைம் நாவல்கள், மாத இதழ்கள், வார இதழ்கள் என பொழுதுபோக்கிற்கு படிக்கும் புத்தகங்களால் ஒரு நேரத்தில் வெறுமையை உணர ஆரம்பித்த காலகட்டத்தில், முதன் முதலில் திரு. பாலகுமாரன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது இந்த கடலோரக் குருவிகள் நாவலில்தான். இன்று வெறுமையாக உணர்ந்தால்,  அவர் நாவல்களைத் தேடுமளவிற்கு அவரது எழுத்திற்கு ஆளுமை உள்ளது என்பதை அவரது வாசகர்களால் உறுதியாக கூற முடியும்.

ஆரம்பத்தில் அந்தக் கதையின் ஆரம்பம் மற்றும் எழுத்து நடை, கிரைம் நாவலின் வாசகனான எனக்கு அப்பொழுது பிடிபடாதது ஆச்சரியமில்லைதான். எதோ இருக்குமென்று வலுக்கட்டாயமாக படித்து சில பக்கங்களை கடந்த அன்றிலிருந்து
Author: ஜெயகாந்தன்
•08:20
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்றகிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாலகுமாரன். பள்ளி இறுதி வகுப்புவரை தேறிய பாலகுமாரன், சுருக்கெழுத்தாளராக வாழ்கையைத் தொடங்கி, பிறகு பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பதவி வகித்தவர். எழுபதுகளின் துவக்கத்தில் வெகுஜனத் தன்மையோடு கவிதைகள் எழுதத் துவங்கிய இவர், வெகுஜன சிறுகதைகள் எழுதுவதில் மடைமாறி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். எண்பதுகளில் தமிழ் வெகுஜன நாவல் எழுத்தானது, ஒருதரமற்ற- தட்டையான- உள்ளீடற்ற குற்றக் கதைகளின் வணிக எழுத்தாக மலிலிந்துகிடந்த நேரத்தில், எல்லாருக்குமான எளிய உளவியல் பார்வை கொண்ட நூற்றுக்கும்மேற்பட்ட சமூக, குடும்பக் கதைகளை மிகுபுனைவு நாவல் களாக எழுதி,சுஜாதாவுக்கு இணையாக தமிழ் வெகுஜன வாசகர் பரப்பின் ரசனையை ஒருபடி மேம்படச் செய்தவர் பாலகுமாரன். இவரது எழுத்துக்கள் தமிழ் வெகுஜன வாசகனை நவீன வாசிப்புக்குக் கொண்டு வந்து சேர்த்த படிக்கட்டுகள் என்ற மதிப்பீடு தீவிரவாசகர்கள் மத்தியில் உண்டு.
Author: ஜெயகாந்தன்
•12:16
"இரும்பு குதிரைகள்" கவிதைகள்.
                                                                                                     

"சவுக்கடிபட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை கண்மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகம்தானென்று கதறிட மறுக்கும் குதிரை கல்லென்று நினைக்க வேண்டாம் கதறிட மேலும் நகைக்கும் உலகத்தை குதிரை அறியும்"
                                                                                                     
"நிலம் பரவி கால்கள் நீட்டி கன்னத்துப் பக்கம் அழுந்த குதிரைகள் தூங்குவதில்லை ஏனைய உயிர்கள் போல நிற்கையில் கண்கள் மூடி களைப்பினைப் போக்கும் குதிரை தொட்டதும் விழித்துக் கொள்ளும் தொடுதலைப் புரிந்து கொள்ளும் தூங்குதல் பெரிய பாவம் தூங்கவா பிறந்தீர் இங்கு? வாழ்வதோ சிறிது நாட்கள் அதில் சாவினை நிகர்த்த தூக்கம் புரிபவர் பெரியோர் அல்லர் வாழ்பவர் தூங்க மாட்டார். குதிரைகள் கண்கள் மூடி குறி விரித்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்சகட்டம் நெற்றிக்குள் சந்திரபிம்பம்"
                                                                                                     
Author: ஜெயகாந்தன்
•19:29
எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும். -கற்பூர வசந்தம்.

பணப்பித்தும், பெண் பித்தும், நிலப்பித்தும் கொண்ட ஊரில் தெளிந்தவன் பித்தாய் தெரிவான். ஆடை இல்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். -கற்பூர வசந்தம்.

கடல் உண்டெனில் சுறா உண்டு. ஆனந்தம் உண்டெனில் அவலமும் உண்டு. சிவநெறியே வாழ்க்கை எனில் சோதனையும் உண்டு. -கற்பூர வசந்தம்.

தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது. -கற்பூர வசந்தம்.

Author: ஜெயகாந்தன்
•20:20
ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.

நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை. -கற்பூர வசந்தம்.

Author: ஜெயகாந்தன்
•10:12
மகிழ்ச்சி என்பது கார், பங்களா, காசு, பணத்தில் இல்லை. நன்றாக உண்டு நன்றாக தூங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியம். உண்மையிலேயே உங்களைப் பற்றி அக்கறைப்படுகிற, அன்பு காட்டுகிற மக்கள் இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.- பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில்-2.

உழைக்கத் தெரிந்தவர்கள் மற்றவரை ஒருபோதும் புறந்தள்ளமாட்டார்கள். பொறாமைப்படமாட்டார்கள். பொறாமை அகற்றல். வெற்றி வேண்டுமெனில்-2.

Author: ஜெயகாந்தன்
•15:21
அகம்பாவம் தான் எல்லா பிரச்னைக்கும் அடிப்படை காரணம். அகம்பாவம் தான் மிகப் பெரிய அறியாமை. தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள ஒட்டாமல் செய்கிறது. புரிந்தவர் மீது பொறாமை வருகிறது. புரியாத போது ஆத்திரம் வருகிறது. மனிதனை, மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம். உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.

ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.

Author: ஜெயகாந்தன்
•15:27
எதனால் மனிதருக்கு வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடிவதில்லை. வெற்றிக்கோ முன்னேற்றத்திற்கோ சந்தர்ப்பங்கள் எவருக்கும் ஏற்படாமல் இராது. அவை ஏற்படும்போது இது வெற்றிக்கான விஷயம் என்று தெரிவதே இல்லை.நல்ல வாய்ப்பு என்று ஒரு வேலையின் ஆரம்பம் காட்டுவதே இல்லை. -கடலோரக்குருவிகள்.

Author: ஜெயகாந்தன்
•11:39
எல்லா ஊர்களிலும் எல்லா மொழிகளிலும் வசவுகள் உடலுறவு சம்மந்தமாகவும், புணர்ச்சி சம்மந்தமாகவும் இருக்கின்றன. போகத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுபவையாகவே இருக்கின்றன. உடலுறவு மனித ஆங்காரத்தின் விஷயமாகப் போயிற்று. மன ஆங்காரத்தை வெளிப்படுத்த உடல் ஆங்காரத்தின் விஷயம் முக்கியமாயிற்று.

ஒருவனை கடன்காரன் என்றோ, கொலைகாரன் என்றோ திருடன் என்றோ பொய்யன் என்றோ சொல்லுவதால் ஏற்ப்படும் கோபத்தை விட, அவனை இயலாதவன் என்று சுட்டிக்காட்டுகிறபோது கோபம் ரௌத்திரமாக மாறுகிறது. புணர்ச்சி முக்கியமாக இருந்தது. அதே சமயத்தில் இழிவாகவும் கருதப்பட்டது. முக்கிய மனதை இழிவுபடுத்த மூர்க்கம் பிறந்தது. ஜனங்கள் புணர்ச்சி கலந்த வசவைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களைப் போனார்கள். -கனவுகள் விற்பவன் 2.

Author: ஜெயகாந்தன்
•18:09

வாழ்க்கை என்பது எளிதே அல்ல. அது நமது கற்பனைகளுக்கும். கணக்குகளுக்கும் அடங்காது. மிக நுண்ணிய சிக்கல்கள் கொண்டது. மேலோட்டமாய் நுனிப்புல் மேய்கிறவர்கள் வாழ்க்கையில் ஜெயித்ததாய் சரித்திரமில்லை. கற்பனையில் வாழ்ந்து தான் கற்ப்பனை செய்து கொண்டதே உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிற வாலிபர்களும். யுவதிகளும் அவஸ்தைப்படாமல் மீண்டதில்லை.
-மனசே மனசே கதவைத்திற.

Author: ஜெயகாந்தன்
•17:05
நம்புவதால் ஏற்படுகிற பயமின்மையும், பயமின்மையால் ஏற்படும் சந்தோஷமும், சந்தோஷத்தால் ஏற்படும் உறுதியும் மனிதனுடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் கம்பிரத்தைக் கொடுத்துவிடுகின்றன. அப்பட்டமான தோல்வியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்க வைத்துவிடுகின்றன.
-திருபூந்துருத்தி.

தோல்வி என்பது பெரிய விஷயமே அல்ல.தோல்வி வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கி, அது வந்துவிட்டபோது ஏற்படும் மனத்துவளலே முக்கியமான விஷயம்.

Author: ஜெயகாந்தன்
•15:57
மலர்ச்சியாக உலகத்தில் தெரிகின்ற பெண்ணுக்கு அடிவேர் ஆண்தான்.அந்த அடிவேர் உற்சாகமாக இருக்கவேண்டுமென்றால் பசுமையான செடி மிக முக்கியம்.மலர்கள் மிகமுக்கியம். இதுதான் வாழ்க்கை.
-உத்தமன்

ஆத்திரப்படுபவன் திறமை இருந்தாலும் அசிங்கப்படுவான்.
-உத்தமன்.

Author: ஜெயகாந்தன்
•10:40
மரணம் நிச்சயம். இதை மறுதலிக்க ரணம் அதிகமாகும்.
-குரு.

கற்றுக்கொள்ளுதலுக்குப் பணிவு முக்கியம். பணிவு அமைதியில் மட்டுமே வரும். அமைதியாக இருக்க தனிமையாய் இருப்பது உதவும்.
-குரு.

நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் ஆசைப்படும் விஷயங்களெல்லாம் சோதனை முயற்சியாகத்தான் இருக்கின்றன.
-குரு.

Author: ஜெயகாந்தன்
•11:02
ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம்.வளர்ச்சிக்கு குரு காரணம்.- குரு வழி.

குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு. - குருவழி.

எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக்கனிவான அக்கறை ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சினையை அணுகவும் தெரிந்து விடுகிறது.- சூரியனோடு சில நாட்கள்.

Author: ஜெயகாந்தன்
•12:08
நமது தளத்தில் எழுத்து சித்தரின் சிந்தனைகளை அவரின் வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன் ஜெயகாந்தன், நன்றி.
                                                                                                                 
மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.