Author: ஜெயகாந்தன்
•20:20
Share
ஆசை என்பது அருக்கப்படாமலும் அனுபவிக்கபடாமலும் இருக்கவேண்டும்.

நாமம் நாமி இரண்டும் ஒன்றே.பிரிக்க முடியாதவை.இது இரண்டும்தான் அகந்தை ஜீவிப்பதற்கு உணவு. இவை இரண்டையும் அழித்துவிட்டால் அகந்தை என்பது இல்லை.அகந்தை இல்லாதவனுக்கு உருவம் இல்லை. -கற்பூர வசந்தம்.



அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான் உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும். மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும். -கற்பூர வசந்தம்.

தன்னோடு பேசப் பேச விசாரம் விரிவடைகிறது. இது நெஞ்சோடு புலத்தல். விசாரம் இருக்கிற மனிதனுக்கே விசாரணை வரும்.விவரணை உள்ளவனே இறைத்தன்மை உள்ளவன். -கற்பூர வசந்தம்.

நிகழ்வில் மட்டும் ஒட்டியவருக்கு இறந்தகாலம் எதிர்காலம் இல்லை. இன்று பூஜை செய்தால் நாளை பெரும் செல்வம் எதிர்பார்கிறவருக்குத் தவறா சரியா என்கிற பயம் உண்டு. பூஜையே பெரும் செல்வம் என்று அமர்ந்தவருக்குச் செய்யும் நினைவு செய்கிறோம் என்கிற நினைவு கூட வராது. -கற்பூர வசந்தம்.

தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்.தனக்குள் தான் நிலையாகாதவன்தான் பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான். -கற்பூர வசந்தம்.

தன்னைப் பற்றிய முடிச்சைப் பரிசுத்தமுள்ள உள்ளங்களால் மட்டுமே அவிழ்க்க முடியும். -கற்பூர வசந்தம்.

நெருப்பு சிவம். குங்கிலியப் பொடி மக்கள். எப்போதெல்லாம் குங்கிலியப் பொடி நெருப்பில் படுகிறதோ உடனே புகையாகிறது. உருமாறுகிறது. எல்லா இடத்திற்கும் பரவுகிறது. பொடியாய் இருக்கும் வரை மூட்டையிலோ பெட்டியிலோ இருக்கும் வஸ்து, கடவுள் தன்மை பட்டவுடன் புகையாய் பரவுகிறது.புகையை எதில் பிடித்து வைப்பது? யார் என்னுடையது என்று இறுக்கி வைத்துக்கொள்வது? -கற்பூர வசந்தம்.

பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 11
This entry was posted on 20:20 and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On April 4, 2010 at 6:52 AM , OurLife said...

Is karpoora vasantham a new novel?

 
On April 7, 2010 at 3:32 PM , Jayakanthan R. said...

I think "Karpoora vasantham" is a publish name like "palsuvai novel" and "aananda novel" the story title may into that book.

 
On April 30, 2010 at 9:12 PM , Sunda said...

really this is good work,...

keep it up,...

can u tell me,.. where can i download his stories,....

 
On February 26, 2015 at 3:18 AM , சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன் said...

I like it all collection.It's great job