Author: ஜெயகாந்தன்
•10:44
Share

மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.

மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.

அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும். அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும், அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.



நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்.உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள். -என்னுயிர்த்தோழி.

எதிரே எவரோ ஒருவர் உட்கார்ந்து சொல்லித் தருவதும் அப்படி சொல்லித்தருபவர் எதிரே உட்கார்ந்து கற்றுக்கொள்வதும் எளிதான விஷயங்கள். ஆனால் வாழ்க்கை கடினமானது. கற்றுக்கொண்டதெல்லாம் மறந்துபோகின்ற சந்தர்ப்பங்களை வாழ்க்கை அடிக்கடி ஏற்படுத்தித் தரும். -கடலோரக்குருவிகள்.

அன்போடு அன்புமயமாக இருக்கிற விதத்தில் ஆவேசமில்லை.ஆவேசமில்லாதபோது துக்கமுமில்லை. -கடலோரக்குருவிகள்.

நன்மை இது என்று தெரிந்திருந்தும், மிகச் சரியாய் தீதான விஷயத்தை சுவீகரித்து கொள்ளும்.மனசு மிகத் தெளிவாய் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மிக மக்குத்தனமாய் ஒரு முடிவு எடுக்கும். கற்றுக் கொள்வதற்கு ஒரு திறமை வருவது போல, கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் அப்பியாசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டியிருக்கிறது. அதாவது எந்த நேரமும் கற்றுக் கொண்ட பாடத்தோடேயே இருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் பூதாகரமான பிரச்சினைகள் முளைக்கிறபோது எதிர்கொள்ள முடிகிறது. -கடலோரக்குருவிகள்.

அக்கறை என்பது வீட்டில் மனைவியிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் சிறப்பு. அதுதான் நியாயம். பிறகுதான் குழந்தைகள் மீது படரவேண்டும்.குழந்தைகள் மீது படர்ந்த அக்கறையைப் போல உலகத்தார் மீதும் படரவேண்டும்.இவர்கள் அனைவரும் என்குழந்தைகள் என்கிற எண்ணம் வரவேண்டும். -சங்கரர் ராணியிடம் - கூடு.

அனவரதமும் என்னையே எவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ, அவன் தினசரி யோகஷேமத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் என்பது வார்த்தைகளாகவே இருக்கும். இதை உள்வாங்கி யோசிக்க யோசிக்க உண்மை புரியும்.வார்த்தைகள் அர்த்தமாவதற்கு அனுபவம் தேவை. அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை கிரகித்துக்கொள்ளும் நடுநிலைமையான புத்தி தேவை. -கடலோரக்குருவிகள்.
This entry was posted on 10:44 and is filed under , , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: